1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:38 IST)

ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவன் பலி.. 1,000க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல்..!

ஆட்டோவில் சென்ற கல்லூரி மாணவன் விபத்தில் பலியானதை அடுத்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சாலை மறியல் செய்ததால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடலூர் தேவாரம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம் காட்டியுள்ளனர் 
 
இந்த நிலையில்  பேருந்து காலதாமதம் ஆனதால் கல்லூரி மாணவர் ஒருவர் ஆட்டோவில் சென்ற நிலையில் அந்த ஆட்டோ விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 
 
இதனை அடுத்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததே விபத்திற்கு காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டிய நிலையில் திடீரென 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை சமாதானம் செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran