1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Borewell using instead of Rig in Surjith rescue

ரிக் இயந்திரத்திற்கு பதில் போர்வெல்: இடைவிடாத மீட்பு பணி

போர்வெல்
சுர்ஜித்தை உயிருடன் மீட்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இரண்டாவது ரிக் இயந்திரம் பழுதடைந்த நிலையில், தற்போது ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் மூலம் துளை போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

நள்ளிரவில் ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீடீரென இயந்திரம் பழுதானதை தொடர்ந்து, இரண்டாவது இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தோண்டும் பணியை ஆரம்பித்தனர். 

பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,  இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரமும் பழுதடைந்ததக தகவல் வெளியானது. பழுதை சரிபடுத்துவதற்கான வேளையில் தீவிரனாக இறங்கியுள்ள நிலையில். பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்படது. இதுவரை 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரிக் இயந்திரத்திற்கு பதிலாக தற்போது 1,200 குதிரை திறன் கொண்ட போர்வெல் மூலம் துளை போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 100 அடி குழி தோண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath