புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (11:23 IST)

நானும் ஒரு குழந்தையோட தகப்பன்...நீ வந்தாதான் தீபாவளி...எழுந்து வா தங்கமே - ஹர்பஜன் சிங் உருக்கம் !

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  அன்று முதல்  தமிழக அரசு, தன்னார்வலர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்புப்படையினர் என பல்வேறு தரப்பினர் குழந்தை மீட்கும் பணியில் ஈட்டுபட்டுள்ளனர். இதற்கு, கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  ஹர்பஜன் சிங்  தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பி( சுஜித் ) நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. எனவே தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது. 
 
குழந்தை சுர்ஜித் கிணற்றில் விழுந்து 40  மணிநேரமாகிவிட்டது. அவரை  மீட்கும் பணி முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வரிகிறது.
 
குழந்தை கிணற்றுக்குள் 100 அடிக்கு கீழே சிக்கிக் கொண்டிருப்பதால், அதற்கு அருகிலேயே,  இன்னொரு குழி தோண்டி அதில் மூன்று தீயணைப்பு வீரர்கள் இறங்கி, பக்கவாட்டின் வழியே குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர். 
 
ஆனால், 27 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் அதிக அளவு இருந்ததால் குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் ஒ.என்.ஜி.சி.நிறுவனத்திலிருந்து ரிக் மெஷின் கொண்டுவரப்பட்டு தற்போது குழந்தையை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள மக்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதுதான்.
 
இதுகுறித்து, கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  ஹர்பஜன் சிங்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
 
நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali என தெரிவித்துள்ளார்.