செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2022 (20:09 IST)

சென்னைக்கு 100 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார்.

electric buses
தமிழகத்தில் அடுத்த கட்டமாக எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதல் கட்டமாக 100 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார் 
 
மேலும் சென்னையில் இலவச பேருந்துகளை பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தற்போதைய தகவலின்படி  69 சதவீத பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இலவச பேருந்துகளால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்து பெண்கள் மிகவும் பயனடைகின்றனர் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
 
Edited by Siva