1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (13:20 IST)

பெரம்பலூர் அருகே சிறுமியை பலத்காரம் செய்த 60 வயது முதியவர் கைது

பெரம்பலூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.


 


பெரம்பலூரை அடுத்த குன்னம் பகுதியைச் சேர்ந்த 32 வயது சிறுமி ஒருவ ரருகிலிருந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அதே பகுதியில் வசிக்கும் சிவபிரகாசம்(வயது 60) என்ற முதியவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பேசி தனது பைக்கில் வெளியே அழைத்து சென்றார்.   

இந்நிலையில் வீட்டில் மகளை காணாமல் தவித்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர்.  ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதனிடையே அரியலூர் பேருந்து நிலையத்தில் அழுதவாறு நின்ற அந்த சிறுமியை பார்த்த பொதுமக்கள் விபரம் கேட்டு அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதைய்டுத்து விரைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்ததில் பெரியவர் சிவபிரகாசம் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை கைது செய்து செய்தனர்.