1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (13:07 IST)

கள்ளக்காதலுக்கு இடையூறு ; கணவனை கொன்ற மனைவி - சென்னையில் அதிர்ச்சி

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு பெண் கொலை செய்த விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை வடபழனியில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடை மனைவி பாரதியும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அங்கு கார்த்திக் ரவீந்திரன் என்பவரோடு, பாரதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடைவில் அது கள்ளக்காதலாக மாறிவிட்ட்டது.
 
எனவே, தனது கள்ளக்காதலுக்கு தன்னுடைய கணவன் இடையூறாக இருப்பதாக உணர்ந்த பாரதி, நேற்று இரவு தனது காதலன் கார்த்திக்கை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன்பின், உறங்கிக் கொண்டிருந்த கோபால கிருஷ்ணனை, கார்த்திக் தன்னிடம் உள்ள கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அதன்பின் என்ன செய்வது என்று யோசித்த கார்த்திக், யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக பாரதியை கயிற்றால் கட்டிபோட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 
 
இரவு நேரத்தில் சுற்றித் திருந்த கார்த்திக்கை, அந்த பகுதி வழியாக ரோந்து சென்ற போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் பேசியதால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.
 
அப்போது தான் செய்த கொலை குறித்து அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த பாரதியை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
அவர்கள் இருவரும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.