தொடர்புடைய செய்திகள்
- திருப்பதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை: பக்தர்கள் கடும் அவதி
- எடப்பாடி பழனிசாமிக்கு கானல் நீராகிய ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ் காட்டில் மழை!
- 800ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு
- தப்பு மேல் தப்பு பண்ணும் ஓபிஎஸ்... ஜெயகுமார் காட்டம்!
- இன்று முதல் 5 நாட்களுக்கு மழை - சென்னையில் வானிலை நிலவரம் என்ன?
இன்று முதல் 5 நாட்களுக்கு மழை - வெதர் அப்டேட்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக சென்னை மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெட்பம் தற்போது இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 26, 27 ஆம் தேதி கன்னியாக்குமரி, நெல்லை, மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
