1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EPS upset about admk case judgement

எடப்பாடி பழனிசாமிக்கு கானல் நீராகிய ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ் காட்டில் மழை!

EPS
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நிலையான தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமியின் தரப்புக்கு சாதகமாக இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததால் அவர் ஒற்றை தலைமையை பிடித்து விடுவார் என்றே பலர் கணித்தனர்.
 
ஆனால் ஓபிஎஸ் தரப்பு பதிவு செய்த வழக்கின் தீர்ப்பில் ஒற்றை தலைமை உள்பட தனி தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக்கூடாது என கூறப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ஈபிஎஸ் அவர்களின் ஒற்றை தலைமை கானல்நீர் ஆகிவிட்டதாகவும் ஓபிஎஸ் காட்டில் மழை பெய்து வருவதாகவும் அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நல்ல பொழுதாக விடிந்துள்ளது. தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து