வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (08:29 IST)

திருப்பதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை: பக்தர்கள் கடும் அவதி

Tirupati
திருப்பதியில் இன்று காலை திடீரென ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பக்தர்கள் கடும் அவதியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
திருப்பதியில் இன்று காலை திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக காத்திருந்த இலவச தரிசன பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்
 
பகலில் நல்ல வெயில் அடித்த நிலையில் திடீரென இரவில் மழை கொட்டியது என்றும் இன்று அதிகாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதால் திருப்பதியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக தங்குமிட வசதி கூட இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது