தொடர்புடைய செய்திகள்
- அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
- ''1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழா'' -அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய முதல்வர்
- 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!
- தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றம்
- 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்..!
திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 46%ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு
திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்வு என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 4% உயர்த்தப்பட்டு 46% என வழங்கப்படவுள்ளது.
அகவிலைப்படி விவகார்த்தில் அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 42%ல் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
