வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:38 IST)

2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்..!

இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால் சங்கரன்கோவில் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என சங்கரன்கோவில் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர் இதற்கு நகராட்சி தரப்பிலிருந்து எந்தவிதமான பொறுப்பான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தூய்மை பணியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
இந்த பேச்சு வார்த்தையின் போது தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
 
Edited by Siva