செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:32 IST)

தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றம்

MK Stalin
ஆதிதிராவிட நல விடுதிகளில் பணிபுரியும் 98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல மக்க்கள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தருமபுரி, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதில், சிறப்பு காலமுறை ஊதியம் நிலை  2  ரூ.4100, 12,000 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், பகுதி நேர தொகுப்பூதிய தூய்மை பணியாளார்கள் 98 பேரை  முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக ரூ.39,91,344 நிதி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.