1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (10:15 IST)

''1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழா'' -அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய முதல்வர்

tamilnadu
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 856 நாட்கள் ஆகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில்களை அதன் பழமை மாறாமல் மீட்டெடுத்து சாதனை படைத்த இந்து அறநிலையத்துறை 1000வது திருக்குடமுழுக்கு விழா சென்னை- மேற்கு பாமபலத்தில்  உள்ள   அருள்மிகு விசுவநாதர் திருக்கோவிலில் நடத்துகிறது.

இதுகுறித்து, முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில்,

"எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக  தமிழக இந்து அறநிலையத்துறை-இன் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.

இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இதற்குக் காரணமான அமைச்சர்  சேகர் பாபு அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!'' என்று தெரிவித்துள்ளார்.