1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 40 ADMK MLA's ready to suppoprt Dhinakaran

தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?

அதிமுக
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை 40 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர்.


 

 
ஒபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்ததை அடுத்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்தனர். அதன்படி சசிகலாவை பொது செயலாளர் பதிவியில் இருந்து நீக்க இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சி கலைந்தாலும் கட்சியை விடமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். 
 
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
வெளிப்படையே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்களை தவிர மேலும் சில அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மொத்தம் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் இல்லை - பயப்படுகிறதா எடப்பாடி அணி?