ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (12:25 IST)

எடப்பாடி ஒரு வெத்துவேட்டு..அட்டைக்கத்தி - நாஞ்சில் சம்பத் விளாசல்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என அதிமுகவின் பிரச்சார பேச்சாளரும், தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில்  சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
முக்கியமாக, தினகரன், சசிகலா கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு,  சசிகலா நியமித்த நியமனங்கள் செல்லாது. அதேபோல், அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது. மேலும், நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை தினகரன் தரப்பிடம் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் “தினகரனின் நியமனங்கள் அனைத்தும் செல்லும் அதேபோல் நமது எம்ஜி.ஆர், ஜெயா தொலைக்காட்சி கைப்பற்ற முடியாது. அது தனியார் சொத்து. இந்த அடிப்படை அறிவு கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லை. அதனால்தான் அவரை தினகரன் அன்றே 420 எனக் கூறினார்.
 
எடப்பாடி அணியினர் விபரீதத்தின் எல்லைக்கு செல்கிறார்கள். அதன் விளைவு மோசமாக இருக்கும்.தமிழகத்தின் முதல்வராக ஆடிட்டர் குருமூர்த்திதான் செயல்படுகிறார். அவரின் ஆலோசனைப்படிதான் அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியை கலைப்பது எங்கள் நோக்கமில்லை. இது தொடரவே விருப்பம். ஆனால்,  எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். அவர்கள் வெறும் வெத்துவேட்டு..அட்டைக்கத்தி..” என அவர் பதிலளித்தார்.