தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டியது அரசின் நோக்கமல்ல - முதல்வர் பழனிசமி!
- ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகம் போர்களமாகும் – சீமான் எச்சரிக்கை!
- ஸ்டெர்லைட்டுக்கு எதிரானவன்தான்.. ஆக்ஸிஜனுக்காக ஒத்துக்கிறேன்! – திருமாவளவன் கருத்து!
- ஸ்டெர்லைட் ஆலை: ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எதற்கும் மின்சாரம் வழங்கக் கூடாது - கனிமொழி
- ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம்? – அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு!
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தற்காலிக அனுமதி: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக நான்கு மாதங்கள் மட்டும் அனுமதி அளிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு கூறியதை அடுத்து தமிழக அரசு முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. இந்த நிலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது
திமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்கவும் மின்சாரத்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
மேலும் ஒரு சில தீர்மானங்கள் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இயற்றபட்டு உள்ளதாகவும் அந்த தீர்மானங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
