தொடர்புடைய செய்திகள்
- விதிமீறி பிரச்சாரம் - கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு !
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு!
- இன்று பிரச்சாரத்தைத் தொடங்கும் விஜயகாந்த்!
- ஈபிஎஸ் தொகுதியில் ஓபிஎஸ்... ஆலோசனையில் நடந்தது என்ன?
- பண மூட்டையுடன் நடு ரோட்டில் தகராறு?!; அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்: எத்தனை நாட்கள் டாஸ்மாக் மூடப்படும்?
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து ஏப்ரல் 4 முதல் 6 தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
