செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (20:55 IST)

இன்று அம்மா வீடியோ; நாளை 2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு: பரபரப்புக்கு பஞ்சமில்லாத தமிழகம்!!

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. 
 
இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கடந்த 2011 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
 
சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போனது.

இந்நிலையில், 2ஜி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.  2ஜி வழக்கின் தீர்ப்பால், பல அரசியல் திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக பல வதந்திகள் வரும் வேளையில் ஆர்கே நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா தொடர்பான இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.