1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H Raja compare Kamaraj and Modi

காமராஜரை கூட வீழ்த்திவிடலாம், மோடியை வீழ்த்தவே முடியாது: வெற்றிகளிப்பில் பாஜக!

காமராஜர்
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேஷ் சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. குஜராத்தில் ஆறாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இமாச்சல பிரதேஷத்தில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக.
 
பாஜகவின் இந்த இரு மாநில வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவை கூட பெற முடியாத, தமிழகத்தில் காலூன்ற தொடர்ந்து திணறி வரும் பாஜகவினர் பாஜகவின் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேஷ வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
 
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமூக வலைதளமான முகநூலில் இந்த வெற்றி குறித்து அதிரடியாக பதிவிட்டு வருகிறார். பாஜக இந்நிலையில் தனது பதிவு ஒன்றில் எச்.ராஜா, காமராஜரை கூட வீழ்த்திவிடலாம்..மோடியை வீழ்த்தவே முடியாது.. என அதிரடியாக கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடித்து விட்டு இந்த வசனத்தை கூறட்டும் என அதில் பலர் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
19 வயதில் துறவறம்; நடனமாடி வரவேற்ற பெண்கள்