தொடர்புடைய செய்திகள்
- பொதுஇடங்களில் மாடுகள் திரிந்தால் அபராதம் -சென்னை மாநகர ஆணையர்
- அமமுக , பாமக, ஓபிஎஸ் இணைந்து புதிய கூட்டணியா? கமல் கட்சி, தேமுதிக இணையுமா?
- அரசு மருத்துவமனைகளை, பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறதா திமுக?-அண்ணாமலை
- பிரபல இயக்குனர் சித்திக்குக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை!
- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!
தேமுதிக ஆர்ப்பாட்டம்.. மீதமான உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அந்த பகுதியில் உள்ளது மக்கள் சாப்பிட்டனர்
இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் மீதம் இருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது அடுத்து 25 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
