1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (09:41 IST)

பிரபல இயக்குனர் சித்திக்குக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை!

தமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா மற்றும் காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சித்திக். மலையாளத்தில் முன்னணி இயக்குனராக அறியப்படும் சித்திக் அங்கு பல படங்களை இயக்கியுள்ளார். நகைச்சுவை அம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் சித்திக்.

இந்நிலையில் இப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எக்மோ சிகிச்சை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் குணமாக வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.