தொடர்புடைய செய்திகள்
- இந்த ஆண்டு நமக்கும், தமிழகத்துக்கும் முக்கியமான. ஆண்டு: கமல்ஹாசனின் புத்தாண்டு வாழ்த்து
- கமல் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுத்த ‘இந்தியன் 2’ படக்குழு!
- சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தின் முக்கிய அறிவிப்பு!
- புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை..
- உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு: சென்னை மேம்பாலங்கள் மூடல்
மழையுடன் ஆரம்பித்த புத்தாண்டு: சென்னைவாசிகள் மகிழ்ச்சி!
இன்று அதிகாலை 12 மணி முதல் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இன்றைய புத்தாண்டு செழிப்பாக தொடங்கும் வகையில் இன்று அதிகாலையில் இருந்தே சென்னையின் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது
குறிப்பாக சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் காலையிலிருந்து விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இன்று முற்பகல் வரை சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
2020ஆம் ஆண்டின் முதல் நாளே மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் வருணபகவான் சென்னைக்கு மழையை பொழிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதல் சென்னைவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து மழையை ரசித்து வருகின்றனர். மழையுடன் தொடங்கிய இன்றைய புத்தாண்டு ஆண்டு முழுவதும் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று எதிர்பார்ப்போம்
