1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (21:25 IST)

கமல் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுத்த ‘இந்தியன் 2’ படக்குழு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இடைவிடாத அரசியல் பணிகள் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக கமலஹாசன் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும், இருப்பினும் பொங்கல் முடிந்த உடன் அவர் 'இந்தியன் 2' படக்குழுவினருடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நாளைய புத்தாண்டை முன்னிட்டு கமல் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக சற்று முன்னர் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அட்டகாசமாக வெளியாகியுள்ள இந்த போஸ்டர் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரித்திசிங், பாபிசிம்ஹா, ப்ரியா பவானிசங்கர், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், விவேக், மனோபாலா உள்ளிட்டோர் நடித்த 'இந்தியன் 2' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகவுள்ளது