தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு
- கலவரத்தில் உயிரிழந்த 19 பேரில் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை- முதல்வர் மம்தா பானர்ஜி
- சிறைத்துறையில் துணை ’ஜெயிலர்’ பணியிடங்கள்! – உடனே அப்ளை பண்ணுங்க!
- குரூப்-4 காலி பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு..! தேர்வு முடிவுகள் எப்போது? – அரசு பணி எதிர்பார்ப்பு!
- டிகிரி முடிச்சிருந்தா போதும்.. EPFO நிறுவனத்தில் வேலை! – வெளியான அசத்தல் அறிவிப்பு!
2,222 அரசு ஆசிரியர் பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த தகுதித்தேர்வு வரும் ஜனவரி 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் 2ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியான தேர்வர்கள் trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
