கலவரத்தில் உயிரிழந்த 19 பேரில் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை- முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8 ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறையால் 696 வாக்குச்சாவடிகளில் திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவவு நடந்தது.
இந்த வன்முறையில் 19 பேர் பலியாகி உள்ளதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மொத்தம் உள்ள 74000 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களில் 3068 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முன்னிலையில் வகிக்கிறது எனவும், பாஜக 1151 இடங்களிலும் காங்கிரஸ் 168 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 460 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகவும், திரிணாமுல் கங்கிரஸ் 28 கிராம சமிதி இடங்களில் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.2 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.