வியாழன், 30 நவம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (11:29 IST)

சிறைத்துறையில் துணை ’ஜெயிலர்’ பணியிடங்கள்! – உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு சிறைத்துறையில் துணை ஜெயிலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சிறைத்துறையில் காவல் அதிகாரிகள், சமையாளாளர்கள், உதவியாளர்கள் என பல்வேறு பணிகளில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வபோது சிறைத்துறையில் காலியாகும் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் 59 துணை ஜெயிலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை ஜெயிலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதன்படி 59 துணை ஜெயிலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு ஜூலை 1ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெற தொடங்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் மே 11ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சி தளத்தை காணவும்.

Edit by Prasanth.K