வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (17:58 IST)

காஞ்சி கோவிலுக்கு சொந்தமான 1970 ஏக்கர் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1970 சதுர அடி நிலம் மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திமுக ஆட்சி வந்த பின்னர் அறநிலை துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு அதிரடி நடவடிக்கை காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன இதுவரை 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 1970 சதுர அடி மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல கோயில்களின் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் அதிரடியாக மீட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் திருச்சி திருச்செங்கோடு திருத்தணி திருப்பரங்குன்றம் சோளிங்கர் ஆகிய ஐந்து முக்கிய கோவில்களில் ரோப்கார் வசதி விரைவில் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்