செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (10:37 IST)

கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு? 70 நாட்களில் இத்தனை கோடியா? – அமைச்சர் சேகர் பாபு தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அறநிலையத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன, கோவில் விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடங்கி கோவில் நிலங்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் கோவில் சொத்து மீட்பு குறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு “தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து 70 நாட்களுக்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள், நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.