வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (11:38 IST)

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின்!

முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று பார்வையிட்டார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின், திமுகவின் பிதாமகனான அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நினைவு இல்லத்தை சுற்றிப் பார்த்த அவர் அங்கு வருகை தந்ததற்கான பதிவில் குறிப்பெழுதினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ‘எங்களை உருவாக்கிய கலைஞரை அண்ணாவின் இல்லத்துக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன். அண்ணா தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்று நான் எழுதியுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.