1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 15 MLA's waiting to join Dhinakaran team

எப்போ என காத்திருக்கும் 15 எம்.எல்.ஏ.க்கள்; சசிகலா நீக்கப்படுவாரா?

சசிகலா
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினால் 15 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுகவில் ஓபிஎஸ் அணி இணைந்த பிறகு எடப்பாடி சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க திட்டமிட்டு வருகிறார். சசிகலாவை பொதுக்குழு கூட்டி கட்சியில் இருந்து நீக்க போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
தினகரன் தனது ஸ்லீப்பர் செல்கள் கட்சியில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி சசிகலாவுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால் 15 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் தினகரன் ஆட்சியை விட கட்சிதான் முக்கியம் என்ற நிலையில் உள்ளாராம். அதற்காக தினகரன் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
About Writer
Abimukatheesh