1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:34 IST)

மேனேஜரையே போட்டு தள்ளிய சாமியார்.. அதிகரிக்கும் க்ரைம் ரேட்! – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

ஆசிரம பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறையில் உள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் மீது மேனேஜர் கொலை வழக்கும் உறுதியாகியுள்ளது.

தேரா சச்சா சவ்தா என்ற ஆசிரமத்தை நடத்தி வந்தவர் சாமியார் ராம் ரஹீம் சிங் ஜீ இன்சான். இவர் சாமியாராக மட்டுமல்லாமல் பேஷன் டிசைனர், நடிகர், இயக்குனர் என சினிமாவிலும் வலம் வந்தவர். இவர் நடித்து மெசஞ்சர் ஆப் காட், ப்ரேவ்ஹார்ட் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இந்த ராம் ரஹீம் கடந்த 2016ம் ஆண்டில் ஆசிரம பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு ரோடாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவரது ஆசிரமத்தில் முன்னதாக பணிபுரிந்த ரஞ்சித் சிங் என்பவர் கடந்த 2002ம் ஆண்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டதை சிபிஐ விசாரித்து வந்தது. இதில் ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான தண்டனையும் ராம் ரஹீம் சிங்கிற்கு விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.