1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (22:20 IST)

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சுப்ரீம்கோர்ட்!

உத்தரபிரதேச மாவட்டத்திலுள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது சமீபத்தில் கார் மீது கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த விவகாரம் குறித்து அந்த பகுதிக்கு சென்று ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சட்டீஸ்கர் மாநில முதல்வரை அந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தலைமை நீதிபதி நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் நாளைய விசாரணையின் போது பெரும் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.