1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 122 Cuddalore patients found today

கடலூரில் ஒரே நாளில் 4 மடங்கான கொரோனா பாதிப்பு! கோயம்பேடு மார்க்கெட்டால் எகிறும் எண்ணிக்கை!

Koimbedu
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் 122 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 527 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தலைநகர் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடையவர்களால் புதிதாக இப்போது கொரோனா எண்ணிக்கை அதிகமாக தொடங்கியுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 122 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

இன்று மட்டும் புதிதாக 19 மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?