செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 4 மே 2020 (16:50 IST)

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை !

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால், இன்று செய்தியாளர்களிடம், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,204 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் 27.52% ஆக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அனைத்து மாவட்டங்களிலும்  இதைக் கட்டுப்படுத்த அடுத்த எல்லா முயற்சிகளை முடுக்கிவிட்டு, துரியதாகச் செயல்படுத்திவருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் வருடா வருடம் நடக்கும் ஆன்மீக நிகழ்வான கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சித்ரா பெளர்ணமியை ஒட்டி நாளை மறுநாள் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது .,குறிப்பாக வெளியூர் மக்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கிரிவலம் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர்  கந்தசாமி அறிவித்துள்ளார்