செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 மே 2020 (16:02 IST)

திமுக பேச்சாளரை தீவிரவாதி பட்டியலில் சேர்க்க சொல்லும் காயத்ரி ரகுராம்!

திமுக இளம் பேச்சாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னாவை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் பாஜக வைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த பேச்சாளரான தமிழன் பிரசன்னா ஆவேசமாகவும் உணர்ச்சி பெருக்கோடும் பேசுவதில் வல்லவர். அதற்காக அவருக்கு சமூகவலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதே போல எதிர்ப்பாளர்களும் அதிகம். இந்நிலையில் சில தினங்களுக்கும் முன்னர் அவர் பிரதமர் மோடி குறித்து பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

அவரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் காயத்ரி ரகுராம் ‘திமுக பிரசன்னா பேச்சு சுதந்திரமா? அல்லது அரசியலமைப்பிற்கு எதிரானதா? அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? திமுக பிரசன்னா பேச்சு பயங்கரவதுகள் எப்படி அப்பாவி மக்களை மூளை சலவை செய்வதற்கு பேசுவார்களோ அப்படி உள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும், அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். நடவடிக்கை எடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் கருத்துக்கு பாஜக ஆதரவாளர்களிடம் இருந்து ஆதரவும், திமுக ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்பும் எழுந்துள்ளது.