வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2023 (15:36 IST)

தெருநாய்கள் கடித்து பிரபல தொழிலதிபர் உயிரிழப்பு

barag desai
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் பிரபல தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு அகமதாபாத் நகரில் உள்ள தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்ததில் பிரபல தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் நகரில் தெரு நாய்கள் சுற்றித் திரிந்த நிலையில், வாஹ் பக்ரி டீ குழுமத்தில் நிர்வாக இயக்குனர் பராத் தேசாயை தெரு நாய்கள் கடித்தது. அவரது வீட்டின் அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்த அவரை கண்ட பாதுகாவலர்கள் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பின்னர், பராக் தேசாயை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்தனர். 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.