1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (11:12 IST)

10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். மேலும் அவர் தேர்வு அட்டவணையையும் பத்திரிகைகளுக்கு அளித்துள்ளார். இதன்படி 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை இதோ:
 
ஜூன் 1 - மொழித்தேர்வு
 
ஜூன் 3 - ஆங்கிலம்
 
ஜூன் 5 - கணிதம்
 
ஜூன் 6 - மாற்று மொழித்தேர்வு
 
ஜூன் 8 - அறிவியல்
 
ஜூன் 10 - சமூக அறிவியல்
 
ஜூன் 12 - தொழிற்பிரிவு
 
மேலும் பிளஸ் 1 வகுப்பின் ஒரே ஒரு பாடத்திற்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேர்வு ஜூன் 2ல் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வை எழுத தயாராகி வருகின்றனர்.