செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (09:50 IST)

திருந்த மாட்டீங்களா டா... வேதனையில் தமிழக காவல்துறை!!

ஊரடங்கை மீறக்கூடாது என கூறியும் மக்கள் இவ்வாறு சுற்றி திரிவது காவலர்களுக்கு வேதனையளிக்கும் ஒன்றாக உள்ளது. 
 
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கை பின்பற்றி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதையும் மீறி மக்கள் அடிக்கடி சாலைகளில் திரிந்து வருவதால் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு. 
 
மேலும், 97,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.38,54,144 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறக்கூடாது என கூறியும் மக்கள் இவ்வாறு சுற்றி திரிவது காவலர்களுக்கு வேதனையளிக்கும் ஒன்றாக உள்ளது. 
 
மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளில், கொரோன பயம் இவற்றை புறம் தள்ளி காவலர்கள் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
இதில் வேதனை அளிக்கும் வகையில், சென்னையில் உள்ள மயிலாப்பூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி, சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.