1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (11:35 IST)

அனுமனாய் மாறி உதவிய மோடி: பிரேசில் அதிபர் உணர்ச்சிபூர்வ கடிதம்!!

பிரேசிலுக்கு ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்தின் மூலப்பொருட்களை தருவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. 
 
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்திற்கு முக்கிய பங்கு இருப்பதை மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்ட நிலையில், அதன் வெளிநாட்டு ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது இந்தியா. 
 
ஆனால் ஏற்றுமதி நிறுத்துவதற்கு முன்பே அமெரிக்க அதிபர் இந்தியவிடமிருந்து அந்த மருந்தை கேட்டிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப்பின் அதிருப்தி பேச்சை தொடர்ந்து அமெரிக்காவிற்கு மருந்து அனுப்ப அனுமதித்தது இந்தியா.
 
இந்நிலையில் பிரேசில் அதிபர் போல்சனேரோ பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ராமாயணத்தை மேற்கோள் காட்டியுள்ள அவர் அனுமன் சிரஞ்சீவி மலையையே கொண்டு வந்து இலட்சுமனனை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்ஸிக்ளோரோகுயினை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் பிரேசிலுக்கு ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்தின் மூலப்பொருட்களை தருவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. எனவே, இதற்கு நன்றி தெரிவித்து பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சரோ  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 
அதில், ஹைட்ரோகுளோபின் மருந்தின் மூலப்பொருட்களை தருவதற்கு நன்றி. மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து பெறப்பட்டு மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படும். தனது கோரிக்கையை ஏற்று உதவ முன்வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.