திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 மே 2023 (16:08 IST)

10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: தேதியை அறிவித்தது தமிழக அரசு..!

Exam results
சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு பொது தேர்வு வெளியாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எழுதினர். 
 
இந்த நிலையில் மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வெளியான நிலையில் மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு  பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva