1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 மே 2023 (15:06 IST)

பிளஸ் 2 ரிசல்ட்: நீட் தேர்வுக்கு முன் முதலிடத்தில் இருந்த நாமக்கல் இப்போது எந்த இடம் தெரியும?

நீட் தேர்வு நடத்தப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சியில் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது ஒன்பதாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 
 
நீட் தேர்வுக்கு முன்னர் 11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் நேரடியாக பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்தை நாமக்கல்லில் உள்ள ஒரு சில பள்ளிகள் நடத்துவதாகவும் மாணவர்களை இரவு பகலாக மனப்பாடம் செய்ய வைத்து முதல் மதிப்பெண் எடுக்க வைத்ததால் அம்மாவட்ட மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்து வந்ததாஜ்க குற்றச்சாட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் நீட் தேர்வு என்று ஒன்று வந்த பிறகு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவர்களால் மருத்துவக் கல்விக்கு அதிகம் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் விருதுநகர் மாவட்டமும் கடைசி இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது
 
Edited by Siva