செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 8 மே 2023 (12:05 IST)

தாமதமாக வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்.. தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

Result
இன்று காலை 9:30 மணிக்கு ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது காலதாமதமாக அதாவது 10.15 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.
 
பிளஸ் 2 ரிசல்ட்டை www.dge.tn.gov.in , www.tnresults.nic.in , 
www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய நான்கு இணையதளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இணையதளங்களில் மாணவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் பிளஸ் டூ ரிசல்ட் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தியாக பிளஸ் டூ ரிசல்ட் அனுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் மாணவிகளின் 96.38% பேர்களும் மாணவர்களில் 91.45 சதவீதம் பேர்களும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran