தேர்வில் தோல்வி பயம்: பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் முன்பே தற்கொலை செய்து கொண்ட மாணவர்..!
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு முடிவு வெளியாகும் முன்பே தேர்வு பயம் காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 47000 மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் காரணமாக பிளஸ் டூ மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற அந்த மாணவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தேர்வு பயம் காரணமாக தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran