வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (10:29 IST)

தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் சோதனை.. 1000 கிலோ கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!

Pepper Chicken
சமீபத்தில் நாமக்கல் பகுதியில் சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து அதை நாமக்கல் பகுதியில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
இதனை அடுத்து  தற்போது  தமிழக முழுவதும் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1187 உணவகங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 1024.75 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மேலும் கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த 115 உணவகங்களிடம் இருந்து மொத்தமாக 1.61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran