ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:57 IST)

சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி.. பயணிகள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக முடிந்ததாகவும்  இந்த ரயில்  24ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் விழுப்புரம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே சென்னை மைசூர் மற்றும் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னை நெல்லை இடையே இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva