1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police filed case against tvk mla arul vignesh

பெண் ஆட்சியருக்கு ஆபாச மேசேஜ்!.. தவெக எம்.எல்.ஏ மீது FIR பதிவு.. காவல்துறை தகவல்...

arul vignesh
பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண் கலெக்டர் புகார் அளித்தால் சட்டப்படை நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ் மோகன் கூறியிருந்தார்.

இதற்கிடையில் அருள் விக்னேஷை நேரில் அழைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டித்ததாகவும் செய்திகள் வெளியானது. ஒரு பக்கம் இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில் அருள் விக்னேஷ் மீது பெண் கலெக்டர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்துள்ளதாக இன்று காலை செய்திகள் பரவியது. இதையடுத்து அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முக ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், மாணிக்கம் தாகூர், அண்ணாமலி உள்ளிட்ட பலரும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் பெண் கலெக்டர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடிய பாடகிக்கு 74 கசையடிகள்.. இரான் அரசு நிறைவேற்றம்..