1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
  4. Make delicious Egg Thokku!!

சுவையான முட்டை தொக்கு செய்ய !!

Egg Thokku
அதிக புரதச்சத்துக்கள் நிறைந்த முட்டையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நல்லது. இப்போது சிம்பிளான முட்டை தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 4
சின்ன வெங்காயம் - 20
காய்ந்த மிளகாய் - 10
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

முதலில் முட்டைகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அறைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு சுருள வதக்கவும்.

வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு, வதக்கிய மசாலாவில் போட்டு நன்கு கிளர வேண்டும். முட்டையில் மசாலா நன்கு சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் முட்டை தொக்கு தயார். இவை சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: தேவைப்பட்டால் வெங்காயம் வதக்கி, அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கியும் சேர்க்கலாம்.

Edited by Sasikala
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இந்த மூலிகையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா...!!