1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (12:58 IST)

சுவையான முறையில் முந்திரி கொத்து செய்வது எப்படி...?

Munthiri Kothu
தேவையான பொருட்கள்:

முழு பச்சை பாசி பயறு - 1 கப்
வெல்லம் - முக்கால் கப்
அரசி மாவு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



செய்முறை:

வெல்லத்தை கொதிக்கவைத்து வெல்ல பாகு தயாரித்து கொள்ளவும். ஓர் சூடான கடாயில் பச்சை பாசி பயறை நன்கு வறுத்து சிறிது நேரம் கழித்து அதனை பொடியாக அரைக்கவும். பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி அதனுடன் கலக்கி வைத்துள்ள பாசிப்பயறு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, அவை அனைத்தும் வெல்ல பாகோடு சேறுமாறு நன்கு கலக்கவும். அவை நன்கு கலந்த பின்பு வெதுவெதுப்பான சூடுடன் இருக்கும் போதே அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

பின்பு வேறு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்து இட்லி மாவின் அடுத்த நிலை பதத்திற்கு கலககவும்.

தயாரித்த உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும். கொத்தாக வேண்டுமென்றால் இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கவும். சுவையான முந்திரி கொத்து தயார். இதனை சிறிது நாட்கள் வைத்தும் சாப்பிடலாம்.

Edited by Sasikala