1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (16:15 IST)

அமீர் கான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போகும் தமிழ் இயக்குனர்?

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கல்யாண சமையல் சாதம் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நகைச்சுவை திரைப்படம் கல்யாண சமையல் சாதம். திருமணத்துகு முன்பு தனக்கு ஆண்மைப் பிரச்சனை இருப்பதான உணரும் ஆணுக்கும் அவனை திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் கதை தான் கல்யாண சமையல் சாதம். இந்த படத்தில் பிரசன்னா மற்றும் லேகா வாஷிங்டன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தை இயக்குனர் பிரசன்னா இந்தியில் ரீமேக் செய்து அங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இதையடுத்து தற்போது அவர் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ள படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.