1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (12:42 IST)

குப்பையில் போடும் வெங்காயத்தோலில் இத்தனை நன்மைகளா !!

Onion skin
வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. நாம் அன்றாடம் சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கும் முன் தோலை நீக்கிவிட்டு உட்பகுதியை மட்டும் நறுக்கி சமைப்போம். அதை கழிவுகளாக குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் வெங்காயத் தோலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். இந்த டீயில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதிக கலோரி கொண்ட பானங்களுடன் ஒப்பிடும்போது வெங்காயத் தோலைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் அதிக நன்மை பயக்கும்.

வைட்டமின் ஏ நிறைந்த வெங்காய தேநீர் கண்களுக்கு நல்லது. இது சருமத்தின் தன்மையையும் மென்மையையும் மேம்படுத்துகிறது. வெங்காய தேநீர்: தண்ணீர் காய்ந்ததும் வெங்காயத்தோல், சர்க்கரை, டீத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இது சற்று வித்தியாசமான சுவை, ஆனால் இது உங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காயத் தோல் பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். அவற்றில் வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. அவை தோல் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

வெங்காயத்தோல் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டிருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு பலன் அளிக்கின்றன. கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு வெங்காயத் தோல்கள் நல்ல மருந்தாக உள்ளது. வெங்காயத் தோல்கள் ஃபிளாவனாய்டுகளின் வளமான மூலமாகும். ஃபிளாவனாய்டுகள் பாலிபினோலிக் கலவைகள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தலாம்.

கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஃபிளாவனாய்டு, குவெர்செடின் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஃபிளாவனாய்டு நல்ல கொலஸ்ட்ரால் அளவை பாதிக்காது. வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை நீக்க உதவும். இது பருவகால நோய்த்தொற்றுகளின் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

Edited by Sasikala